தெலுங்கானாவில் நாகப்பாம்பு ஒன்று சிவன் சிலை கழுத்தில் ஏறி படமெடுத்து ஆடும் காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் மிகப்பெரிய சிவபெருமான் சிலை ஒன்று உள்ளது. இங்கு எப்பொழுது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்யும்பொழுது, திடீரென நாகப்பாம்பு ஒன்று சிவபெருமான் சிலையின் கழுத்து பகுதியில் ஏறி படமெடுத்து நடனமாட ஆரம்பித்தது. இதனை பார்த்து ஆரம்பத்தில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் உண்மையை உணர்த்தவே பாம்பு நடனமாடுவதாக நினைத்து வழிபட ஆரம்பித்தனர்.
தற்போது இதுதொடர்பான காணொளி காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.