சந்திர கிரகணத்தின் போது திருமணம் செய்து கொள்வது அமங்கலமான விடயம் என்ற மூடநம்பிக்கையை உடைக்க அந்நாளில் திருமணம் செய்ததாக இளம் ஜோடி தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரங்க நாயகா – வசந்தா குமாரி ஆகிய இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
ஆனால் பலரும் அமங்கல நாளாக கருதும் சந்திர கிரகண நாளன்று இருவரும் கரம் பிடிக்க முடிவு செய்து அதன்படியே சமீபத்தில் வந்த சந்திர கிரகணத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நாயகா – வசந்தா திருமணத்தை முருகராஜேந்திரா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமி நடத்தி வைத்தார்.
இது குறித்து மணமகன் நாயகா கூறுகையில், சந்திர கிரகணத்தில் திருமணம் செய்யக்கூடாது என பலரும் என்னிடம் கூறினார்கள்.
அப்படி செய்தால் எதாவது தவறு நேரும் எனவும் கூறினார். ஆனால் சந்திர கிரகணம் அமங்கலமான விடயம் என நாங்கள் நம்பவில்லை.
இது மூடநம்பிக்கை என உணர்த்தவே இந்நாளில் திருமணம் செய்தோம்.
கண்களை மூடி கொண்டு இதுபோன்ற தவறான விடயங்களை ஆதரிக்கக்கூடாது என கூறியுள்ளார்.