புத்தரும் விஷ்ணுவின் அவதாரமே. இதனால் வடக்கில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கு தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த பணகல உபதிஸ்ஸ தேரர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா?
இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான். கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம் தான் புத்த பகவான்.
பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் சொந்த மதத்தவர்கள் என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்.மாவட்டத்திற்கு வந்த பணகல உபதிஸ்ஸ தேரர் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தித்து மத வேற்றுமைகளை களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் பேசியிருந்தார்.
தொடர்ந்து மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து, யாழ். மாவட்டத்திலும், குறிப்பாக வடமாகாணத்திலும் மக்களுக்குள்ள தேவைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.