வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரண்டு மாவீரர்களின் நினைவிடத்திற்கு அருகில், அனைத்து இயக்கங்களில் இருந்தும் மரணித்தவர்களிற்கான பொது தூபியை அமைக்க வேண்டுமென வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில், ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் எம்.கே.சிவாஜிலிங்கம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நகரசபை உறுப்பினர்களை நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தியே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வைத்துள்ளார் சிவாஜிலிங்கம்.
வெலிக்கடை படுகொலை நினைவுநாளில் சிவாஜிலிங்கம் உரையாற்றியபோது, அந்த நிகழ்வு பிரபாகரனினதும் விடுதலைப்புலிகளினதும் நினைவுநாளா என்ற சந்தேகம் வரும் விதத்தில் சிவாஜிலிங்கம் உரையாற்றியிருந்தார்.
பிரபாகரனை பற்றியே பேசி, இடையிடையியேதான் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகனை பற்றி பேசியிருந்தார்.
பன்னிரண்டு போராளிகளின் நினைவிடத்திற்கு அருகில், இன்னொரு தூபி அமைப்பது- முன்னைய தூபியை இல்லாமல் செய்யும் திட்டமா? பொதுமேடையில் விடுதலைப் புலிகளை பற்றி பேசிவரும் சிவாஜிலிங்கம், இந்திய- இலங்கை கூட்டுச்சதியில் பலியான போராளிகளின் ஒரே நினைவிடத்தையும் அகற்றிவிட துடிப்பதன் மர்மம் என்ன?