கடித்த பாம்பை, கையில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்!!- (வீடியோ)

பாம்பு கடித்ததால் அதைக் கையோடு தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனை சென்றுள்ளார்.

நம்மில பல பேருக்கு பாம்பை கண்டாலே பயம். அதுவும் பாம்பு கடித்து விட்டால் அச்சத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அதையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவரது பாம்பு சுற்றியிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து பீப்பிள் டெய்லியில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சீனாவின் ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை தனது மணிக்கட்டில் சுற்றிய படி கொண்டு சென்றுள்ளார். அதிக விஷம் கொண்ட பாம்பு இல்லை என்றாலும் பார்ப்பதற்கு மிகுந்த அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.

அமைதியாக மருத்துவமனைக்கு வந்த பெண், பொறுமையாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். அவருக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.