ஐரோப்பிய கடலில் அபாயகரமாக ஜெலிமீன்கள்…

ஓகஸ்ற் மாதம் பிறந்துவிட்டது ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு கோடைகாலத்தின் முக்கியகாலகட்டம் இது. புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஆர்வத்துக்குரிய தமது கடற்கரை பயணங்களைத் தொடர்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஒரிரு நாட்களாக ஐரோப்பிய கடற்பரப்புகளில் அபாயகரமாக ஜெலிமீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஜேர்மனியின் கடற்கரை ஒன்றில் 90 பேர் ஜெலி மீன்களினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர்.தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலையால் கடல்நீரின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதால் அதிகமாக ஜெலிமீன்படை பெருகிவருகிறது.

இதனை பலஇடங்களில் அவதானிக்க முடிகிறது. பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சில கடற்கரைகளிலும் இதன் அச்சுறுத்தல் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைகளில் குளிப்பவர்கள் அவதானம் எடுக்கவேண்டிய ஒரு தேவை உருவாகியுள்ளது.

ஜெலிமீன்கள் தோலில் பட்டால் அது பெரும்தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிலருக்கு இது மரணஅபாயத்தை கூடஉருவாக்கிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.