ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா!

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ´ஜிமிக்கி கம்மல்´ என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் ´காற்றின் மொழி படத்திலும் இடம்பெற இருக்கிறது.

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.

விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18 ஆம் திகதி படம் ரிலீசாகிறது.