நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்து

வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா உச்ச வரப்பிற்குட்பட்ட நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போது பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் தொகையை ரத்துச் செய்து நிவாரணம் வழங்க அரச ஒன்று முன்வருவது இதுவே முதற்தடவை என்று அமைச்சர் கூறினார்.
லங்கா மைக்ரோ பினான்ஸ் பிரக்டிக்கல் அசோஸயேசன் நிறுவனத்தில் அங்கம் பெற்ற நுண்நிதி கம்பனிகள் மற்றும் நிதிக் கம்பனிகளில் கடன்பெற்ற பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.