பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒரே போராட்டத்தில் போய்க்கொண்டிருந்தது. இதுவரை இல்லாதளவில் ராணி மகா ராணி என டாஸ்க் கொடுக்கப்பட்டு ராணியாக இருந்த ஐஸ்வர்யாவால் சர்வாதிகாரம் நடத்தப்பட்டது.
அவருக்கு உதவியாக ஜனனியு, டேனியும் நியமிக்கப்பட்டனர். இதனால் பலர் டாஸ்க் என கருத்தில் கொண்டு அதை பின்பற்றினாலும் சிலருக்கு பெரும் அதிருப்தி தான்.
இதில் இடையே ஐஸ்வர்யாவுக்கும் பாலாஜிக்கும் இடையே குப்பை கொட்டிய பிரச்சனை, அதனோடு ஐஸ்வர்யாவுக்கும் செண்ட்ராயனுக்கு இடையே டீ பிரச்சனை என பரபரப்பாக இருந்தது.
பின் ஐஸ்வர்யா பொன்னம்பலத்தால் நீச்சல் குளத்தில் தள்ளிவிடப்பட்டார். மக்கள் ஜெயித்தார்கள். இந்நிலையில் டாஸ்க் முடிவடைந்தது. அனைவரும் டாஸ்க் சிறப்பாக செய்தததாக பாராட்டினார்.
தற்போது ஐஸ்வர்யா எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீது கோபம் இல்லை. மேலும் இது எனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை தான் நான் செய்தேன். யார் மனது புண்படும்படியாக நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என கூறினார்.