இணையத்தில் மனைவியின் Video; விரக்தியில் கணவர் தற்கொலை!

தன் மனைவியின் ஆபாச வீடியோவினை பார்த்த பஞ்சாப் கணவர் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்!

பஞ்சாப்பின் கலசிங்காய் பகுதியில் வசித்து வந்தவர் குல்விந்தர் சிங்(35). இவரது மனைவி வேறொருவருடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் இருக்கையில் அதனை படம்பிடித்து வைத்துக்கொண்டு, மனைவியின் கள்ள காதலர் குல்விந்தர் சிங்கினை மிரட்டியுள்ளார்.

இந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றமால் இருக்க தனக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று குல்விந்தர் சிங்கை மிரட்ட, விரக்தியில் இருந்த குல்வந்தர் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 

சம்பவத்தன்று வெளியில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து தன் மனைவி, மகன் அபி(5), மகள் சோனல் (8) ஆகியோர் மீது ஊற்றி எரித்துவிட்டு தானும் தீயில் எரிந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அபி, சோனல், குல்விந்தர் சிங் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளனர். குல்வந்தர் சிங்கின் மனைவி 80% உடல் எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பஞ்சாப் காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக குல்வந்தர் சிங்கிற்கு வீடியோவினை அனுப்பியவர்கள் என பல்கர் சிங், குருப்ரீட் சிங், சத்ய தேவி மற்றும் திரட் சிங் என்னும் நான்கு பேரினை சந்தேகிப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன.