நெற்றியில் குங்குமம் வைத்தால் இத்தனை நன்மைகளா? அசத்தும் அறிவியல் ஆதாரங்கள்!

நெற்றியில் குங்குமம் வைத்தால் இத்தனை நன்மைகளா? அசத்தும் அறிவியல் ஆதாரங்கள்!!! நெற்றியில் அணியக்கூடிய குங்குமம் அதிக நன்மைகளை அளிப்பது, உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.பொதுவாக குங்குமம் இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது.

நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றிப் பொட்டு சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால், அங்கு மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும்.குறிப்பாக, பெண்களின் முன் வகிடுப் பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம்.அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம், மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் ஆகும்.மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளும், இரு புருவங்களுக்கு இடையில் வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று, ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.மேலும், குங்குமத்தை வைப்பதால் எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.