மெல்ஸிகோவில் காண்டாமிருகம் ஒன்று காரை முட்டி தள்ளும் காட்சி வெளியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மெக்ஸிகோவில் உள்ள பியூப்லா என்ற வன உயிரன சரணாலயத்தில் காண்டாமிருகம் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
திறந்தவெளி பூங்காவான இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அமைதியாக நின்று கொண்டிருந்த காண்டாமிருகம் திடீரென காரை சரமாரியாக தாக்கியது.
அதிர்ச்சியடைந்த பயணி காரை நகர்த்த முயன்ற போது காண்டாமிருகம் விடாது மோதிக் கொண்டே காரை விரட்டிச் சென்றது.