வீட்டில் பணம் குறையாமல் இருக்குணுமா?.. இந்த ஒரு அரிசியை வைத்தாலே போதும்!

யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை.

சின்ன சின்ன தெய்வாம்சங்கள் நிறைந்த மாதிரியான, லட்சுமிதேவி உங்களிடம் வந்து வீட்டில் குடி கொள்ளக் கூடிய வகையிலாக பரிகாரங்களசை் செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் நினைத்ததை விடவும் அதிகப்படியான செல்வத்தை, உங்களை விட்டுப் போகாமல் இருக்கும்படியாக செய்ய முடியும்.

பரிகாரம் என்றதும் பயந்து விடாதீர்கள். இதற்கென பெரிதாக நீங்கள் நேரம் செலவழிக்க தேவையில்லை. சின்ன சின்ன எளிமையான பரிகாரங்கள் மூலமாகவே நம்முடைய வீட்டின் செல்வ நிலையைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சின்ன பரிகாரத்தை எந்த சிரமமும் இல்லாமல் எளிமையா செய்து முடிங்க.

பச்சரிசியும், நாணயமும்

ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டு இரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.

பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள். பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.

எங்கே வைக்க வேண்டும்?

இப்படி அரிசியும் நாணயமும் நிரம்பிய அந்த பாட்டிலை வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம். தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம். பீரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு.

கண் பார்வை

நீங்கள் வைக்கும் இடம் மட்டுமே இதற்கு முக்கியம் அல்ல. அந்த பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம். இதன் மூலம் உங்களுடைய இருப்பிடத்தை தன ஆகர்ஷணம் மிக்க இடமாக மாற்ற முடியும்.

எவ்வளவு நாள்

இப்படி ஒரு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் அரிசியை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, மீண்டும் அதே பாட்டிலில் முன்பு குறிப்பிட்ட படியே அதே நாணயங்களைக் கொண்டு, மீண்டும் அரிசியால் நிரப்பி வையுங்கள். பிறகு பாருங்கள். லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிடுவாள். மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது.