பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு குதூகலித்த யாழ் முன்பள்ளிச் சிறுவர்கள்!!

போர் ஓய்ந்த பின்னர் யாழ் குடாநாடு ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையிலும் கூட பலாலி விமான நிலையத்தை எவரும் இலகுவில் பார்வையிட முடியாத நிலை இருந்து வந்தது.

எனினும், அண்மைக்காலமாக பாடசாலைச் சிறார்கள் குழுவாகச் சென்று விமான நிலையத்தை பார்வையிட விமானப் படை சந்தர்பங்களை வழங்கி வருகின்றது .

அவ்வப்போது பலாலி விமான நிலையத்திற்கு ஆசிரியர்களுடன் சென்று விமானங்களை நேரில் பார்வையிட்டு குதூகலிக்க பாடசாலைச் சிறார்களுக்கு இலங்கை விமானப்படை சந்தர்ப்பமொன்றை அண்மையில் வழங்கியிருந்தது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வலி.வடக்கு பலாலி விமான நிலையத்தை அச்சுவேலி கோப்பாய் சரஸ்வதி முன்பள்ளி மற்றும் வல்லிபுரம் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 262 பேர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.