ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் படபடவென்று பேசும் பெண்ணாக உள்ளார்.
நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இவர் எதை பதிவிட்டாலும் அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி விடுகிறது. இந்நிலையில் நடிகை மானசா, புதிதாக பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இதில், மிகவும் அழகாக இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். எனினும், சீரியலில் செம்பா கலாச்சார ஆடையில் கலக்குவார்.
இந்த புகைப்படங்களில் மேலை நாட்டு கலாச்சார ஆடையில் இருக்கின்றார். இதனால் சில ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான கருத்துக்களும் வெளியாகியுள்ளன.