வடக்கு இளைஞர்களுக்கு இனி அதிஷ்டம் தான்- அரசாங்கத்தின் அதிரடி

வடக்கு பகுதியை சேர்ந்த பத்தாயிரம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் விஜத் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

நண்டு ஏற்றுமதி துறையில் பெருமளவு இளைஞர்களை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நண்டு ஏற்றுமதி துறையில் 1200 பேர் தொழிலில் ஈடுபடுவதாகவும், மேலும் இதனை வடக்கு, கிழக்கில் வியாபிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போர் காரணமாக பாதிக்கப்பட்ட விதவை பெண்கள் மற்றம் இளைஞர்கள் நண்டு ஏற்றுமதி துறையில் ஈடுபடுவதன் மூலம் மாதாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சம்பளம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நண்டு ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வருடத்திற்கு ஒரு பில்லியன் ரூபாய் அந்நிய செலாவணி கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.