பிக்போஸின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதற்கு முன் ஓவியா மிகப்பிரபலம் எல்லாம் இல்லை. ஆனால் இப்போது அவரை தெரியாமல் ஒருவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
ஆனால் அந்த சீசன் முடிந்தே பல மாதங்களான நிலையில் அவர் நடிக்கும் படத்தின் தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. ஆனால் தற்போது 90ml என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம். படத்தின் இசையை நடிகர் STR தான் பார்க்க உள்ளார்.
குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதீப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இது சிம்பு ரசிகர்களுக்கும் ஓவியா ஆர்மிகளுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடி ஆரவ்லாம் இல்லையாம், புதுமுகமாம்.