இன்றைய ராசிபலன் (05/08/2018)

  • மேஷம்

    மேஷம்: மாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். திட்டமிட்டு செயல்படு வதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்ப ரகசியங் களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.  மாலை 5.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கடகம்

    கடகம்: உங்களின் அணுகு முறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர் கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வியாபாரத் தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சாதித்துக் காட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். முன்கோபத்தை குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மாலையில் மகிழ்ச்சி தொடங் கும் நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். தாய்வழியில் ஆதர வுப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்ப்புகள் அகலும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதர வுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். கடின முயற்சியால் முன்னேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கு வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்பு கள் தேடி வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.