தரம் பத்தில் கல்வி பயிலும் 15 வயது மாணவிகள் இருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
”நேற்றுக் காலை எனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றதுடன் மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் தமது நண்பியின் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரியார்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இருவர் அவர்களைத் தடுத்துநிறுத்தி வலுகட்டாயமாக முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று சாந்தசோலை பகுதியில் யாருமற்ற வீட்டொன்றிற்கு கொண்டு சென்றதுடன் அங்கு இருவரையும் கயிற்றினால் கட்டியதுடன் தாக்கியுமுள்ளனர்.
அத்துடன் அலரிகொட்டையை அரைத்து வாயில் திணித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்து எமக்கு நடந்த சம்பவத்தைத் தெரியப்படுத்தினர். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் நாம் அவர்களை அனுமதித்தோம்.” என்றார்.
இதேவேளை குறித்த மாணவிகள் இருவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.