முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும்கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான்.
அந்தவேளையில் பக்த அடியார்கள் திருடனை துரத்திச் சென்ற போதும் திருடனை பிடிக்க முடியவில்லை, திருடன் தப்பித்து சென்று விட்டான் மறுநாள் காலையில் அந்தத் திருடன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி அந்த காரினை இடைமறித்துள்ளார்.
திருடன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, இதேபோன்ற அற்புத செயலொன்று பல வருடங்களுக்கு முன்பு அம்பாளுடைய சந்நிதியில் இடம்பெற்றுள்ளது, ஒரு திருடன் அம்பாளினுடைய தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.
திருடிவிட்டு வெளியில் வந்தபோது அவனுடைய இரண்டு கண்களும் பார்வை செயலிழந்து செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் நின்றபோது, பொலிஸார் வந்து திருடனைப் பிடித்த பின்னர் மீண்டும் அவனது கண்பார்வை வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இப்படியாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் இந்த நூற்றாண்டிலும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இக்கதைகள் அனைத்தும் வெறும் வாய்வழி கதைகளென்றோ அல்லது மூடநம்பிக்கை என்றோ அப்பகுதியில் உள்ள யாரும் சந்தேகிப்பதில்லை என்பதுடன் கண்ணகி அம்மனை முழுமனதுடன் மனதுருகி வழிபட்டு வருகின்றனர்.
அம்மனைக் காணவென பெருமளவிலான பக்தர்கள் அப்பகுதிக்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், கண்ணகி அம்மன் அற்புதங்களை நிகழ்த்துபவளாக மாத்திரம் அல்லாமல் தன்னை தஞ்சமடைந்து வாழும் பக்தர்களை தன் அரவணைக்கும் கரங்கள் கொண்டு தாங்குபவளாகவும் இருக்கின்றார்.