சீனாவில் மீண்டும் காலடி பதிக்க துடிக்கும் கூகுள் தேடல் வசதி

கூகுள் நிறுவனத்தின் பல சேவைகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று கூகுள் தேடல் வசதியும் கடந்த 2010ம் ஆண்டு முதல் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக சீனா இந்த முடிவினை எடுத்திருந்தது.

எனினும் சென்சார் செய்யப்பட்ட தேடல் வசதிகளை உள்ளடக்கியதாக மீண்டும் சீனாவில் தனது சேவையை ஆரம்பிக்க கூகுள் நிறுவனம் முனைந்து வருகின்றது.

இதற்காக விசேட அன்ரோயிட் அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் கூகுள் நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட தகவல்களை விடுத்து ஏனைய தகவல்களை தேடிக்கொடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.