இலங்கையின் கடற்கரைகளில் உயிரிழந்த திமிங்கலங்களின் சடலங்கள் ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் புத்தளம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 4 திமிங்கலங்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவி இயக்குனர் சந்திரரத்ன தெரிவித்துள்ளார்.
கடநத ஜுலை மாதம் 7ஆம் திகதி கந்தகுளிய இச்சன்காடு கடலில் முதலாவது திமிங்கலத்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஜுலை மாதம் 16ஆம் திகதி மீண்டும் கந்தகுளிய குடாவ கடற்கரையில் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டுள்ளது.17ஆம் திகதி மூன்றாவது சடலம் மீட்கப்பட்ட நிலையில், 4வது சடலம் நேற்று புத்தளம் நிர்மலபுர கடலில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த நான்கு சந்தர்ப்பத்திலும், புத்தளம் கடற்கரையில் ஒதுங்கிய திமிலங்கலங்கள் பில்டர் பிட் வகையை சேர்ந்ததாகும். அதன் உடலை சோதனையிட்ட போது அது 30 – 35 அடி நீளமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் சடலம் கரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் தலைகள் மீட்கப்படவில்லை. அத்துடன் அதன் உடலின் சில இடங்களில் வெட்டுகாயங்கள் காண முடிந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.