வஞ்சரம் மீன் – 500 கிராம்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்,
புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
மீனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் இல்லாமல் தனியே வைக்கவும். பாத்திரத்தில் அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக கலந்து, மீன் மேலே தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். தவாவை சூடு செய்து ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், மீன்களை ஒவ்வொன்றாக பொரித்தெடுத்து பரிமாறவும்.