ஒலிவ் எண்ணெய் , அதன் ஆச்சரியத்தக்க பண்புகளுக்காக அறியப்பட்டது. ஒலிவ் மரங்கள் பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வளர்கிறது. இதிலிருந்து ஒலிவ் எண்னெய் பிரித்தெடுக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியர்களும் தங்கள் தினசரி உணவுக் கட்டுப்பாட்டு விடயத்தில் ஒலிவ் எண்னெய்யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.ஆனால், தோல், முடிக்கு ஒலிவ் எண்ணெய் பயன்படுவது குறித்து பலர் அறிந்ததில்லை. ஒலிவ் எண்ணெய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை அறிந்தால், அனைவரும் ஆச்சரியப்படுவீர்.
ஆரோக்கியமான முடி என்பது ஆரோக்கியமான தலைப்பகுதியைக் குறிக்கிறது. முடி உதிர்விற்கு காரணம், தலைப்பகுதிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததே ஆகும். இதில் நலம் தரும் ஆண்டி ஒக்சிசன் இருப்பதால், தலைப்பகுதிக்கு மிகவும் சிறந்தது.