மீன் மாங்காய் அவியல்,

விருப்பமான மீன் – 5 துண்டுகள்,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 4,
புளிக்கரைசல் – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய தக்காளி – 1,
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – 50 கிராம்,
கீறிய பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை,
உப்பு – தேவைக்கு,
தேங்காய் – 1/2 மூடி,
மஞ்சள் தூள் – 10 கிராம்,
மிளகாய்த்தூள் – 20 கிராம்,
தனியாத்தூள் – 20 கிராம்,
சீரகத்தூள் – 10 கிராம்,
பெருங்காயத்தூள் – 10 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 50 மி.லி.,
கடுகு, வெந்தயம் – தலா 1 டீஸ்பூன்,
கிள்ளிய காய்ந்தமிளகாய் – 5.

மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி, மாங்காய் போட்டு கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கிளறி மீன், புளிக்கரைசல் ஊற்றவும். பின் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.