அஜித்தின் பிளாக்பஸ்டர் படங்களில் மங்காத்தா படமும் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை அள்ளியிருந்தது.
இந்நிலையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்திருந்த தமிழ்படம்-2 போன மாதம் வெளியாகியிருந்தது. மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்த இப்படம் திரைக்கு வரும் முன்பே விஜய், அஜித் படங்களை எல்லாம் கலாய்த்து ப்ரோமொஷன் செய்திருந்தது.
இவர்களின் அட்டகாசம் இன்னும் முடியவில்லை போலும். ஏனெனில் தற்போது அந்த படத்தின் 25வது நாள் நிறைவை அஜித்தின் மாங்காத்தா பட போஸ்டரை வைத்து கலாய்த்துள்ளனர். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் தங்களது கோபங்களை கொட்டி வருகின்றனர்.
25வது நாளுக்கு அஜித் என்றால் 50வது நாளுக்கு விஜய்யா என தெரியவில்லையே…
wsdsw