பன்றிக்குட்டி ஒன்று தனது உரிமையாளர் கொடுத்த பயிற்சியினால் ஓவியம் வரைந்து அசத்தி பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டாக அவர் கற்று கொடுத்த அந்த பயிற்சியை கற்பூரம் போல கற்றுக்கொண்ட அந்த பன்றி, இப்போது ஓவியங்களை வரைந்து தள்ளுகிறதாம்.
வாயில் பிரஷ் பிடித்து அந்த பிரஷினை வண்ணகலவையில் தொட்டு, லாவகமாக அந்த பன்றி வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும், 300 முதல் 4000 டொலர் வரை விலை போகிறதாம். நம்மூர் பண மதிப்பில் லட்சங்களை தொடும் இந்த பண மதிப்பு. இந்த பன்றி வரைந்த ஓவியங்கள் ஆர்ட் மியூசியத்தில் கூட இடம் பிடித்திருக்கிறதாம்.
இரண்டு வயதான இந்த பெண் பன்றிக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகிலேயே ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமை இந்த பன்றிக்குட்டியையே சாரும். இதனாலேயோ என்னவோ, கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இதை விற்க மறுத்திருக்கிறார் இதன் உரிமையாளர்.