விமானத்தில் பயணம் செய்யும் போது கண்டிப்பாக இந்த விடயங்களை தவிர்க்கவும்

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் அணியும் ஆடைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் உங்களுக்கு ஏற்புடையவையாக இருப்பதோடு மட்டுமல்லால், உங்கள் அருகில் இருக்கும் சக பயணியையும் பாதிக்க வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

விமானத்தில் பயணிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை நீங்கள் தவிர்க்கலாம்.

T-shirts with offensive text (வாசகங்கள் எழுதப்பட்ட ஆடைகள்)
அதிகமான விமான நிலையங்களில் சிலபேர் தாங்கள் அணிந்து சென்ற வாசங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவை இனவெறியை தூண்டும் விதமாக இருந்தது என்பதற்காக.

சாகச பேண்ட்கள், தாக்குதலை தூண்டும் ஆடைகள், திறந்த ஆடைகள், வெற்றுக்காலுடன் பயணிப்பது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

 
High heels (குதி உயர் காலணி)
விமான நிலையத்தில் சோதனை செய்யும்போது சில நேரங்களில் உங்கள் காலணிகளை அகற்றும்படி கோரலாம். அதுமட்டுமின்றி உலோக கட்டுமான தளத்தில் நீங்கள் குதி உயர் காலணியை போட்டிருந்தால் அது சில நேரங்களில் அலாரத்தை ஏற்படுத்தும்.

மேலும், விமான நிலையத்தில் யாரும் அதிக உயரமான காலணிகளை அணிவதை விரும்பமாட்டார்கள், எனவே மிகவும் இறுக்கமான காலணிகளை தவிர்த்துவிட்டு ஷீக்களை அணிந்துசெல்லுங்கள்.

Contact lenses (லென்ஸ்கள்)
ஒரு விமானத்தில் ஈரப்பதம் என்பது 20 சதவீதத்திற்கும் குறைவானதாக இருக்கும். இதனால் உங்கள் லென்ஸ்கள் வரண்டு போவதால் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.

நீங்கள் அதிக நேரம் பயணிக்கும்போது தூங்க முற்படுகையில் லென்ஸினை வெளியே எடுக்க வேண்டிவரும் என்பதால் லென்ஸை தவிர்த்துவிட்டு கண்ணாடி பயன்படுத்துங்கள்.

Summer clothes (கோடைகால ஆடைகள்)
நீங்கள் வெளியில் அதிகம் கொண்ட நாட்டிற்கு பயணித்தாலும், குளிரான நாட்டிற்கு பயணித்தாலும் கோடை கால ஆடைகள் உங்களுக்கு முக்கியம். ஏனெனில் விமானத்தின் வெப்பநிலை என்பது எப்போது வியக்கத்தக்க குளிராக இருக்கும். எனவே Summer clothes பயன்படுத்துவது நல்லது.

Clothes or jewelry containing metal (உலோகம் கொண்ட ஆடைகள் அல்லது நகைகள்)