விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக ஓடிவரும் சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் மீனாட்சியாக நடித்துவருபவர் ரச்சிதா.
இவர் தற்போது சரவணன் மீனாட்சி சீரியல் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கண்ணீருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆறு வருடமாக மீனாட்சியாக சின்னதிரையில் வலம்வந்த மீனாட்சியை இனி ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.