சிக்கலில் சிக்கிக் கொள்ளுமா இலங்கை?

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் வடகொரியா, ஆடைத்துறை தடையை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது

அணுவாயுத உற்பத்தி மற்றும் பயன்பாடு காரணமாக வடகொரியாவின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது

எனினும் அந்த தடையையும் மீறி அது 2017-2018ஆம் ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, உட்பட்ட பல நாடுகளுக்கு 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது

அத்துடன் தொடர்ந்து அணுவாயு உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பவற்றில் அந்த நாடு ஈடுபட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது

இதனைத் தவிர சட்டவிரோதமாக பெற்றோலிய உற்பத்திகளை அந்த நாடு, கப்பல்களில் இருந்து கப்பல்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சீனாவும், ரஷ்யாவும், வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று கோரி முன்வைத்த யோசனையின் போதே ஐக்கிய நாடுகள் சபையால் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை வடகொரியா பதில் வழங்கவில்லை.