படித்து விட்டு அரச வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்தியில் ரீ விற்பனை மூலம் லட்சம் ரூபா சம்பாதிக்கும் இளைஞன்!! மிரள வைக்கும் வியாபார தந்திரம்….!!

முடிந்தால் இயலாதது ஒன்றும் இல்லை. இளக்ககரமான வேலை என வரட்டுக் கௌரவம் பார்க்கும் எமது தேசத்தில் இப்படியான முயற்சியாளர்களை காண்பது முடியாத காரியம் தான்… சரி விடயத்திற்கு வருவோம்…இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீ வியாபாரம் செய்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரகுவீர் சிங் சவுத்ரி என்ற இளைஞர் ஓன்லைன் மூலமே டீ விற்பனை செய்கிறார்.ரகுவீரிடம் ஓடர் செய்த சில நிமிடங்களில் வீடு தேடி சூடான டீ விநிளேயாகம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் ரகுவீர் சிங் ஒன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். ஒன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓடர் செய்யும் பொருளை சைக்கிள் மூலம் வீடு தேடிச் சென்று விநியோகிக்கும் பணியை செய்திருக்கிறார்.

சைக்கிள் சவாரியின்போது ஏற்படும் களைப்பை போக்க ஆங்காங்கே டீ அருந்தி ஆசுவாசப் படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் தான் கொண்டு சேர்க்கும் பொருட்களை போலவே டீயையும் வீடு தேடி சென்று சப்ளை செய்யும் எண்ணம் உதயமாகி இருக்கிறது.இதையடுத்து செல்போனை மட்டும் முதலீடாக வைத்து ஒன்லைன் டீ வியாபாரத்தில் ரகுவீர் களமிறங்கினார்.15 நிமிடங்களில் வீடு தேடி டீ கொண்டு வந்து தருகிறேன் என்று ஒன்லைன் மூலம் விளம்பரம் செய்த நிலையில் மக்களை அது ஈர்த்தது.

பின்னர் நண்பர்களின் துணையுடன் வியாபாரத்தை விரிவுபடுத்தி விட்டார். பிரபலமான கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுத்து வரவேற்கும் வழக்கம் இருப்பதால், அந்த நிறுவனங்களில் மொத்தமாக ஓடர் வாங்கி டீ விநியோகம் செய்து வருகிறார்.

தற்போது 4 இடங்களில் டீ சப்ளை செய்வதற்கான மையங்களை நிறுவியிருக்கும் ரகுவீர் இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறார். பட்டப்படிப்பு படித்து விட்டு அரச வேலைக்காக தெருத் தெருவாக  போராடும் எமது நாட்டு இளைஞர்களுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு மட்டுமல்ல… செருப்படியும் கூட….!