நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய ஆன்மாவானது ஊர் சுற்றிப்பார்ப்பதற்கான நம்முடைய உடலைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லுமாம். நாம் இப்போது இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டு என்பது விஞ்ஞானங்களால் நிறைந்த உலகம்.அதனால், அஞ்ஞானம் மறைந்து போயிற்று என்று அர்த்தமில்லை. நீங்கள் இந்த உலகத்தை உற்றுப் பார்த்தால் உங்களுக்கே நன்றாகப் புரியும்.ஆழ்ந்த உறக்கத்தில் நம்முடைய ஆன்மா ஊர் சுற்றிப்பார்க்க புறப்பட்டுச் செல்லுமாம்…!
இது உண்மையா ? முதலில் இதைப் படியுங்கள்..!!!
ஒருகாலத்தில் கடவுள் மறுப்பாளர்கள் ஒரு பக்கம் தங்கள் கருத்துக்களை ஊர்கூட்டி, சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது எந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு கடவுள் நம்பிக்கையும் ஒருபக்கம் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.கனவுகள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதையும் தாண்டி, நம்மைச் சுற்றிலும் நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நாம் உணர்கிறோம். அதை எல்லோருமே பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்கிறோம். அப்படி ஒரு ஏதோவொரு அதீத திறன்கொண்ட சக்தியாகத் தான் நாம் கனவைப் பார்க்கிறோம்.
அதனால்தான் நாம் கனவில் நடப்பதைப் பற்றிய யோசனையில் மூழ்குகிறோம்.ஆராய்ச்சி நாம் ஆழ்மனதில் என்ன நினைக்கிறோமோ அதுவே கனவாக வருகிறது என்று சொல்லப்படுகிறது.அதையே நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதுபற்றி சிக்மண்ட் பிராய்டு தொடங்கி, ஏராளமானோர் ஆராய்ச்சியும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைத்தாண்டி இன்னொரு விஷயமும் அதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மா வெளியேற்றம்
ஆன்மா என்று சொல்லப்படுவதைத் தான் நாம் உயிர்,ஆவி, என்றெல்லாம் வேறுவேறு பெயர்களில் சொல்லுகிறோம். அந்த ஆன்மாவானது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நம்முடைய உடலைவிட்டு ஆன்மா வெளி உலகத்தைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இது மாயையா? உண்மையா?
ஒருவருடைய இறந்து போன தந்தை அவருடைய கனவில் வந்தார். அவருடன் பேசினார். அவருக்கு இருக்கும் பிரச்னைக்கு சில வழிகாட்டுதல்கள் தந்தார். அதன்படி நடந்து கொண்டதால் அவருக்கு அந்த பிரச்னைகளெல்லாம் தீர்ந்தது என்று யாராவது சொல்லக் கேட்டிருப்போம். அதெப்படி இவருடைய தந்தை இவருடைய கனவில் வரமுடியும். இருவரும் கலந்துரையாட முடியும். ஏனென்றால் இருவருடைய ஆன்மாவும் சந்தித்துக் கொண்டன. ஒன்றின் பிரச்னைக்கு மற்றொரு ஆன்மா வழிகாட்டியது என்றுதான் அர்த்தம். இப்போது தூங்கும்போது ஆன்மா வெளியே போகும் என்ற நம்பிக்கை கொஞ்சமாவது வந்துவிட்டதா?உண்மை
இப்படி நாம் காணும் கனவுகளில் சில அப்படியே நடக்கும். இதற்கு முன்பாக நாம் செல்லாத சில இடங்களுக்குப் புதிதாகப் போகும்போது நாம் கனவில் பார்த்த அதே இடத்தை அச்சு அசலாக எந்த மாற்றமும் இல்லாமல் பார்க்க நேரிடும். இப்போது நம்புகிறீர்களா நம்முடைய ஆன்மா அந்த இடங்களில் எப்போதோ உலவியிருக்கிறது என்று. அது நாம் விழித்திருக்கும்போது சாத்தியமில்லை. அதனால் நிச்சயம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தான் அது நடந்திருக்கும்.
தூங்குபவரை எழுப்பக்கூடாது
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய ஆன்மாவானது ஊர் சுற்றிப்பார்ப்பதற்கான நம்முடைய உடலைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லுமாம். அதனால் தான் ஒருவர் தூங்கும்போது அவசரமாக அவரை எழுப்பக்கூடாது என்று சொல்கிறார்களாம்.ஆத்ம சாஸ்திரம்
அப்படி நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பும்போது உடலைவிட்டு, வெளியுலகத்தில் சுற்றும் ஆன்மாவானது பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் மீண்டும் உடலுக்குள் புகுந்து கொள்ளும் என்று ஆத்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள்
தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பக்கூடாது என்று மருத்துவர்களும் குறிப்பிடுவார்கள். அவ்வாறு அடிக்கடி தூக்கத்தில் இருப்பவர்களை அப்படி அடிக்கடி வேகமாகவோ திடீரெனவோ தட்டி எழுப்பினால், அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
என்ன இப்போதாவது நம்புகிறீர்களா….? ஆன்மாவுக்கும் நம்மை மாதிரியே ஊர் சுத்துகின்ற பழக்கம் இருக்கின்றது என்பதை…..!