உடலில் உள்ள மொத்த அழுக்குகளையும் வெளியேற்ற வேண்டுமா? இதை சாப்பிடுங்க

காலநிலை மாற்றங்கள் நமது உடலின் வளர்ச்சியைத்தூண்டி, வயிற்று பாதிப்புகளை குணமாக்கி, உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும்.

அத்தகைய சூழல்களில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.

உடலில் உள்ள அழுக்குகளை போக்க செய்ய வேண்டியவை
  • தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது அவை கல்லீரலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
  • ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள கொலஸ்ட்ராலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
  • பூண்டில் சுத்தப்படுத்தும் பொருள்களான அல்லிசின் மற்றும் செலினியம் போன்றவை இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
  • ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள் வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி கல்லீரலில் டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்.
  • முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் குளுக்கோஸினோலேட் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகின்றன.
  • கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்க பீட்ரூட்டில் அதிகமாக நிறைந்திருக்கும் ப்ளேவோனாய்டுகள் உதவுகின்றன. எனவே தினமும் பீட்ரூடை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • மஞ்சள் கிருமிகளை அழிக்க ஒரு சிறந்த பொருள் ஆகும்.வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அப்போது மஞ்சளை உணவிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம்.