இனி பிரான்சில் பெண்களை துன்புறுத்தினால் அவ்வளவுதான்: என்ன தண்டனை தெரியுமா?

பெண்களை துன்புறுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கும் மசோதா பிரான்சில் நிறைவேற்றப்பட்டது, அதன்படி பாலியல் ரீதியான விமர்சனங்கள் அல்லது நடத்தைக்கு 90 முதல் 750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் வெளிநாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு குற்றமான பெண்களுக்கு தெரியாமல் அவர்களது உள்ளாடைகள் தெரியும் விதமாக புகைப்படம் எடுத்தல் என்னும் குற்றத்திற்கு 15,000 யூரோக்கள் வரை இனி அபராதம் விதிக்கப்படும்.

Marie Laguerre என்னும் பெண் பிரான்ஸ் தெரு ஒன்றில் பட்டப்பகலில் ஒரு மனிதனால் பாலின ரீதியாக துன்புறுத்தப்பட்டதையடுத்து இந்த மசோதா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Marie துன்புறுத்தப்பட்டது, தெருக்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரான்ஸ் அதிகாரிகளை வழி நடத்தினாலும், அந்த சட்டம் போதுமானதல்ல என்று அவர் கருதுகிறார்.

அந்த சட்டம் ஒரு செய்தியை சொல்கிறது உண்மைதான் என்றாலும் தன்னைப் பொருத்தவரை அது போதாது என்கிறார் அவர்.

ஜனவரியில் பிரான்ஸ் அதிகாரிகள் பெண்களைப் பார்த்து விசிலடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஒரு மசோதாவை முன் வைத்தார்கள், அதன்படி பெண்களை கிண்டல் செய்வோருக்கு 90 முதல் 375 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் புதிய மசோதாவோ இந்த தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. புதிய சட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வர இருக்கிறது.