அந்த காலத்து ராஜா ராணி பேரழகிற்கு இதுதான் காரணமாம்

ராஜா ராணி கதாபாத்திரம் என்றாலே எல்லா இடத்திலும் ஒரு தனி சிறப்பையே எப்போதும் பெற்றிருக்கும். நாம் சிறுவயதில் இருந்தே ராஜா ராணி அவர்களின் வாழ்க்கை முறை, உணவு முறை, ஆட்சி முறை இப்படி பலவற்றையும் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், ராஜா ராணி இவர்களின் பேரழகிற்கு காரணம் என்னனு தெரியாமலையே இருந்திருப்போம்.அவர்களின் பேரழகிற்கான குறிப்புகளைப் பார்ப்போம்.

ராஜா ராணிகளின் அழகு குறிப்புகள்.
  • அவர்களின் சருமம் மிக மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்கவெறும் நீரில் குளிக்காமல் ரோஜா இதழ்களை தொட்டியில் முழுக்க நிரப்பி அதன் மேல்தான் குளியல் செய்வார்கள்.
  • சருமத்தை மிக இளமையாகவும், சுருக்கங்கள் வராமலும் காக்க குளியல் தொட்டியில் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் கழுதை பாலை ஆகியவற்றை கலந்து விடுவார்கள். இதில்தான் தினக்குளியலை செய்வார்கள்.
  • ராணிகள் தங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் கலந்த ஆலிவ் எண்ணெய் குளியல் செய்வார்கள். ஆலிவ் எண்ணெய் முடியை மிகவும் உறுதியாக வைக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் வைக்கும்.
  • தினமும் அவர்கள் குங்குமப்பூ கலந்த பாலை இரவில் குடிப்பார்கள். இதுதான் அவர்களில் முக வெண்மைக்கு முக்கிய காரணம்.
  • தக்காளியுடன் முல்தானி மட்டியை கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் பூசுவார்களாம்.
  • வாதுமை கொட்டை மற்றும் கேரட் இரண்டும் உடலுக்கு மிகுந்த நீண்ட இளமைக்கு முக்கிய காரணம். இதுவே அவர்கள் இயற்கையாகவே இளமையாக இருக்க முடிகிறது.
  • பாதங்களை அழகாக வைக்க தயிர் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பாதங்களில் தடவி வந்தனர். இது பாதங்களை மிக அழகாக வைக்க உதவும்.