ஒருதலை காதலால் இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், இவரின் மகன் சிக்கூ.

சிக்கூவை அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை சிக்கூ ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்றிரவு சிக்கூ வீட்டு வாசலில் நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் வண்டிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.


இதை பார்த்து சிக்கூவின் உறவினர்கள் அங்கு வருவதற்குள் பெண் தப்பியோடியுள்ளார், இதையடுத்து உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

சிக்கூவின் உறவினர் கூறுகையில், ஏற்கனவே ஒருமுறை சிக்கூ தூங்கி கொண்டிருக்கும் போது அவரை கத்தியால் தாக்கினார், தற்போது மோட்டார் வண்டியை எரித்துள்ளார் என கூறியுள்ளார்.

இதையடுத்து பெண்ணை பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.