உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் உங்களுக்கும் உள்ளதா? கண்டுபிடிங்க.

திருமணம் என்பது இரு மனங்கள் ஒத்து நடைபெறும் ஒரு உன்னதமான விடயமாகும். இருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களுடன் விட்டுக் கொடுத்து வாழ்வதே வெற்றிகரமான திருமண வாழ்வாகும்.

எனினும், இருவரில் ஒருவர் எதிர்மாறாக நடந்து கொள்ளும் போது அது மற்றையவருடைய உணர்வுகளை மற்றும் உளத்தை பாதிப்பது உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் என அழைக்கப்படுகின்றது.

உணர்வு ரீதியானது துஷ்பிரயோகமா? அதை எப்படி கண்டுபிடிப்பது எனக் கேட்கின்றீர்களா? பின்வரும் சந்தர்ப்பங்களைக் கொண்டு அதனை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

பரிகசித்தல் அல்லது கேலி செய்தல்
கணவன் மனைவி இருவரில் எவரேனும் ஒருவருக்கு மனச் சங்கடமான நிலை தோன்றியிருப்பினும், மற்றையவர் அவரை ஒரு கேலிக் கூத்தாக கொள்ளுதல்.

இது சம்பந்தப்பட்ட வரை நோகடிக்கும் பட்சத்தில் விளையாட்டாகக் கொள்ள வேண்டியதை பாரதூரமான விடயமாகக் கருதுவதனாலேயே பிரச்சினைகள் எழுகின்றன என்றவாறான கருத்தைத் தெரிவித்தல்.

அளவுக்கு அதிகமான அக்கறை
இந்த சந்தர்ப்பத்தின் போது கணவன் அல்லது மனைவி மற்றையவரை தனியே எந்த இடத்திற்கும் அனுப்பாதிருத்தல், எந்நேரமும் மற்றையவருடனேயே இருத்தல், அதையும் மீறி ஒருவர் வேறு இடத்திற்கு சென்றாலும் அங்கு நடப்பவைகளை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லுதல் போன்ற ஒரு நிலைமை.

தான் இழைத்த தவறுக்கு மற்றையவரை சாடுதல்
தான் என்ன தான் தவறிழைத்திருந்தாலும் அதனை ஒத்துக் கொள்ளாது மற்றையவர் மீது சாடுதல். ஒரு கட்டத்தில் தவறு சாட்டப்பட்டவர் காரணம் எதுவும் இன்றி தன்னையே குற்றவாளியாக நினைக்கும் நிலை ஏற்படுதல்.

தன்னைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தல்
கணவர் அல்லது மனைவி தெரிவித்த விடயம் மற்றையவருக்கு நன்றாக ஞாபகம் இருப்பினும், அதைப் போன்ற எந்தவொரு கருத்தையும் தான் தெரிவிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து நியாயப்படுத்தல். இந்த சந்தர்ப்பத்தில் மற்றையவர் தனக்குத்தானே குழம்பிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

அனுதாபம் தெரிவிப்பதை தவிர்த்தல்
கணவன் அல்லது மனைவிக்கு கவலை அளிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை என்றவாறான கருத்தை மற்றையவர் தெரிவித்தல். அதே போல் தேவையான நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் அருகில் இல்லாதிருத்தல்.

ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தாதிருத்தல்
கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு தொழிலில் உயர்வு ஏற்பட்டுள்ளது எனக் கொள்வோம். ஆனால் மற்றையவரோ அதுகுறித்து சிறிதும் சந்தோஷப்படாது குறித்த உயர்வு சிறந்ததல்ல, அதனை ஏற்கக் கூடாது போன்றவாறான கருத்துக்களை தெரிவித்தல்.

மற்றையவர் எப்போதும் தவறு எனக் கூறுதல்
மற்றையவர் எதைக் கூறினாலும் அதை தவறான கோணத்திலேயே எடுத்துக் கொள்ளுதல். அத்துடன் தான்தான் எப்போதுமே சரி எனவும் மற்றையவர் பிழை எனவும் தெரிவித்தல்.

அதுமட்டு இன்றி, மற்றையவர் வாயிலிருந்து பெறப்படும் விடயங்கள் அனைத்துமே ஒரு கட்டத்தில் பெரும் குறையாக சுட்டிக் காட்டப்படும்.

நல்ல கருத்தை தெரிவிக்க மாட்டார்கள்
கணவன் அல்லது மனைவி ஆரம்பத்தில் மிகவும் அன்பாகப் பழகுவார்கள். ஆனால் காலப் போக்கில் தங்கள் துணை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு அவர்களிடம் இருக்காது. எனவே எப்போதும் மற்றையவரை பற்றிய நல்ல கருத்துக்கள் அவர்களின் வாயில் இருந்து வராது என்று தான் கூற வேண்டும்.

பணம் விடயத்தில் அதிக அழுத்தம்
கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்வதோடு மற்றையவரை மிகவும் கண்டிப்பாக வைத்திருக்க முற்படுதல்.

காரணம் என்னவென்று தெரிவிக்காமலேயே வீட்டை விட்டு வெளியேறல்
கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுவிடின், அதை மற்றையவரிடம் தெரியப்படுத்தாது வீட்டை விட்டு வெளியேறி ஒருசில நாட்கள் வீட்டிற்கு கூட சமூகமளிக்காது இருத்தல்.

வீட்டிற்கு வந்த பிறகும் கூட, தான் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தை மற்றையவரிடம் தெரிவிக்காது இருத்தல். கடைசியில் காரணம் எதுவுமே அறியாத மற்றைய துணை, தன்னைத்தானே தாழ்வுப்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கிற்கு தள்ளப்படுதல்.