பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஷாரிக் ஹாசன் வெளியேற்றப்பட்டார். ஷாரிக் வெளியேற்றப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவருமே கண்ணீர் விட்டனர். ஷாரிக்கை அதிகம் மிஸ் செய்வதாக கூறினார்கள்.
வெளியேறிய ஷாரிக் கமல்ஹாசனுடன் பேசி கொண்டிருந்த போது ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் நான் உன்னை அதிகம் மிஸ் செய்வேன். சீக்கிரம் திரும்பி வந்து விடு என காதலுடன் சொன்னார்.
அதற்கு ஷாரிக் தன் அம்மா அருகில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் நானும் உன்னை அதிகம் மிஸ் செய்வேன் என கூறினார். மேலும் ஐஸ்வர்யா நீ ஆசைப்பட்டபடி நிச்சயம் இந்த பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவேன் எனவும் கூறி இருந்தார்.