யாழ். மக்களை சற்றுமுன் அலறவைத்த மர்ம உருவங்கள்?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணவி பகுதியில் சற்றுமுன்னர் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் மக்கள் மக்கள் பெரும் அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குள் அடங்கும் துணவி மற்றும் செட்டியார்மடப் பகுதிகளிலேயே இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக குறித்த பகுதியில் ஊடுருவியதாகக் கூறப்படும் மர்ம மனிதர்கள் அங்குள்ள வீடுகளுக்கு கற்களால் எறிந்ததுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மின்சூழ்களுடன் தேடுதல் நடத்தியபோதும் யாரையுமே காணமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி எழுதும் தற்போதைய நேரம்வரை குறித்த பிரதேசத்து மக்கள் மற்றும் இளைஞர்கள் வீதியில் நின்று பதற்றத்துடன் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலியில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் வட்டுக்கோட்டை முதலியார்கோவில் பகுதியிலும் குள்ளர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே துணவி மற்றும் செட்டியார்மடப் பகுதிகளில் இன்றைய தினம் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.