என்னோட தலைவனை கறிக்கடைக்காரர் ரமேஷ் முறைத்ததால் அவரை வெட்டினேன். ஆனால் அவர் இறக்கவில்லை’ என்று சென்னையைச் சேர்ந்த ரவுடி மாடு தினேஷ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரவுடிகளைப் பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புளியந்தோப்பு பகுதியில் தலைமறைவு ரவுடிகளைப் போலீஸார் பிடித்துச் சிறையில் அடைத்துவருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல ரவுடிகள் கதிர் என்கிற கதிர்வேலுக்கும் அப்பு என்கிற தினேஷுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்துவருகிறது.
இவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி அப்பு தினேஷின் கூட்டாளியான மாடு தினேஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.