பாஸ்மதி அரிசி – 1 கப்,
கடலை மாவு – 1/2 கப்,
முந்திரி – 6, தக்காளி – 2,
உருளைக்கிழங்கு – 2,
பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லித்தழை – 1/2 கட்டு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 1,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலந்து எண்ணெய் விட்டு பிசிறி, தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டையாக உருட்டி வேகவைத்து ஆறியதும் துண்டுகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கி உப்பு, தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் ஊறவைத்த பாஸ்மதி அரிசி, பொரித்த கடலைமாவு துண்டுகள், கொத்தமல்லித்தழையை போட்டு மூடி வைக்கவும். சாதம் வெந்ததும் இறக்கி முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்