நமது ஆரோக்கியத்திற்கு சீரான சமிபாடும், நோய் எதிர்ப்பு சக்தியும் முக்கியமானது.
இலகுவாக சமிபாடடையும் ஆரோக்கியமான உணவுகளை உட் கொள்வதனால் சமிபாட்டை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
இலவங்கப்பட்டை, எலுமிச்சப்பழச்சாறு, சுத்தமான தேன், ஆப்பிள் சிடர் விநாகிரியின் மருத்துவ குணங்கள்நாம் நன்கறிந்ததே.
இவற்றைப் பயன்படுத்தி செய்யும் உணவினால் சமிபாடு அதிகரித்து இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை குணப்படுத்துகிறது.
தேவையான சேர்மானங்கள்
இலவங்கப்பட்டை – 1 தேக்கரண்டி
ஆப்பிள் சிடர் விநாகிரி – 2 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
எலுமிச்சப்பழச்சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை
மேற்குறிப்பிட்ட சேர்மானங்களைச் சேர்த்து பிளண்டரில் அரைத்து குளிரூட்டியில் வைக்கவும்.
தினமும் காலையில் வெறு வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி சாப்பிட்டு வருவதனால் சமிபாடு சீரடையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலுமிச்சப்பழச் சாறு
உடலின் pH அளவை சீராக்குவதுடன்,இரத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.
ஆப்பிள் சிடர் விநாகிரி
இதில் நல்ல பக்டீரியாக்கள் மற்றும் நொதிப் பொருட்கள் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை 6% வரை குறைக்க உதவுகின்றது.
தேன்
தேன் உடல் எடையை குறைப்பதற்கும், காயங்கள், தொண்டை வலி, குணப்படுத்த, இதயம், சருமத்தை பாதிகாப்பதற்கு, சமிபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் உதவுகின்றது