நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும்.
நாம் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உடலில் ஜீரணமடைவதற்கு உதவும் அமிலங்கள் நீர்த்துப் போய் ஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
- சிலருக்கு சாப்பிடும்போது விக்கல் தோன்றும் அப்போழுது உடனடியாக தண்ணீர் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
- சாப்பிடுவதற்கு முன்னரும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனென்றால் வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. மேலும் உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது.
- அடிக்கடி தொண்டை வறண்டு போய் இருப்பவர்கள் மொத்தமாகக் தண்ணீரைக் குடிக்காமல் சிறிதளவு தண்ணிர் அருந்தலாம்.
எப்பொழுதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்
- காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
- சாப்பிடுவதற்கு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது.
- சாப்பிட்டு இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.
- ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
- தண்ணீர் தினமும் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும்