ஜனாதிபதி வேட்பாளராக களம் குதிக்கிறார் ஷிராந்தி ராஜபக்ஷ? கோத்தபாய, பஷில் அவுட்?

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்ஸவை களமிறக்கினால் அனைவரினது ஆதரவையும் பெறமுடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நா.உறுப்பினர் நாமலுக்கு ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.வேறு ஒரு விடயமாக தொலைபேசியில் உரையாடிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம், அமைச்சர் நிமல் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்ஸவை வேட்பாளராக களமிறக்கினால் அனைவரினது ஆதரவினையும் பெறுவது கடினமாக இருக்கும், பசில் ராஜபக்ஸவை களமிறக்கினால் ஏனையவர்கள் எதனையும் செய்ய முடியாது. அனைத்தையும் அவரே செய்து முடித்துவிடுவார்.ஆகவே, இந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஸவே.அவரைக் களமிறக்கினால் போதும், அனைவரினது ஆதரவையும் பெறமுடியும் என நிமல் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.