மகனை கொன்று சுடுகாட்டில் வைத்து எரித்த தந்தை

இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததுள்ளார்.

இதனை கண்டித்த தந்தை பாலசுப்பிரமணியுடன் தகராறும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையுடன் மணிகண்டன் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மகன் மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

தந்தை பாலசுப்பிரமணி உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்று நள்ளிரவு மணியின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி அவர்கள் தந்தை பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.