பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய காஜல் பசுபதி தற்போது பிக்பாஸ் சீசன் 2 குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் பிக்பாஸ் சீசன் ஒன்றைப் போல் தற்போது இரண்டாவது சீசன் பிரபலமடையவில்லை என்பது மிக நன்றாகவே தெரிகிறது.
இந்நிலையில் காஜல் பசுபதி நள்ளிரவில் மஹத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா நடந்து கொண்டதைப் பற்றியும், பாலாஜி மீது குப்பைக் கொட்டியதைக் குறித்து தனது கருத்துக்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.