வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் – ஸ்ரீதரன்

வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறிகையில்,

வடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணயில் இராணுவமே உள்ளது. இராணுவ முகாம்களில் இருந்தே இந்த தூண்டுதல் வெளிவருகின்றது. இதணை பொலிஸார் நன்றாக அறிந்தும் கவனத்தில் கொள்ளாது உள்ளனர்.

இதன் காரணமாகவே வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தனக்கு பொலிஸ் அதிகாரத்தை தருமாறு கோருகின்றார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை கோரி அதன் மூலமாக இவற்றை கட்டுபடுத்துவதாக அவர் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை.  அவரது கருத்து நியாயமாகவே உள்ளது என்றார்.