இந்தியாவை டிரெண்டிங்கில் மிரள வைத்த “RIPKarunanidhi” எனும் கருணாநிதி ஹேஷ்டேக்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6.10 மணிக்கு காலமானார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6.10 மணிக்கு காலமானார்.

கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் திமுக தலைவர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பு மக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி உடலை மெரினா மருத்துவமனையில் நல்லடக்கம் செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தவிர, நாடு முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து கருணாநிதியின் ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் இந்தியா முழுவதும் டிரெண்டாகி வருகிறது.

அதோடு, ஆர்.ஐ.பி. கருணாநிதி, கலைஞர், கோபாலபுரம், சென்னை, மெரினா பீச், அண்ணா நினைவிடம், மெட்ராஸ் உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, மெரினா4கலைஞர் ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.