இந்து புராணத்தின் படி பகவான் விஷ்ணு கலியுகத்தின் இறுதியில் கல்கி அவதாரம் எடுத்து இந்த உலகத்தை அழிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதையில் கீதா உபதேசத்தின்போது, கலியுகத்தின் முடிவில் தான் இந்த உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று குறிப்பிடுகிறார்.அப்படி விஷ்ணு பெருமான் சொன்ன கலியுகத்தில் தான் நாம் இருக்கிறோம். கலியுகத்தில் கல்கி அவதாரமாக விஷ்ணு வரப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள் பூமியில் இருக்கின்றனவா என்று பார்ப்போம்.
கல்கி அவதாரம்
கலியுகத்தில் அவதாரம் எடுக்கப்போகும் கல்கி (பகவான் விஷ்ணு) கும்ப ராசியில் பிறக்கப் போகிறார். அந்த காலகட்டங்களில் கும்ப ராசியினர் பெரும் சாதனைகளையும் வெற்றிகளையும் குவிக்கும் வல்லமையோடு திகழ்வார்கள்.
சூரியனும் நிலாவும்
கல்கி அவதாரம் பூமியை நெருங்குவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக, சூரியனையும் நிலாவையும் நம்மால் பார்க்க முடியும். ஆம். கல்கி அவதாரம் பூமியில் அவதரிக்கும் காலகட்டம் நெருங்கும்போது, நிலா அளவுக்கு அதிகமாகப் பிரகாசமாக இருக்கும். எப்போதும் இருக்கும் வெண்மை நிறம் போல் அல்லாமல் நெருப்பு போல சிவந்த நிறத்தில் காணப்படும். சூரியன் அளவுக்கு அதிகமாக கதிர்களை வெளிவிடும். வால் நட்சத்திரம் போல் சூரியன் தோன்றும்.
கிரகங்கள்
பூமியில் கல்கி அவதாரம் எடுக்கும்போது, பூமியில் மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களின் தோற்றத்திலும் மாற்றங்கள் உண்டாகும். வியாழன் கோளானது தனுசு ராசியில் அஷ்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும். அதேபோல் சனி கோளானது துலாம் ராசியில் நின்று, நீதியை நிலைநாட்ட வாளை கையில் வைத்துக் கொண்டு போர் செய்யும் ஆற்றலோடு திகழும்.
கேது விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கும். இப்படி கிரகங்கள் ஒவ்வொரு நிலையில், சஞ்சாரிக்கும் நேரமானது உயர்ந்த மலை உச்சியில் பெரிய வெள்ளை குதிரை ஒன்று பறப்பது போல் தோன்றும்.
கல்கி அவதரிக்கும் நேரம்:இதெல்லாம் விடுங்க… கல்கி அவதாரம் எப்படி எப்போது தோன்றுவார் என்று முதலில் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பூமி மிக நெருக்கடியான ஒரு சூழலைச் சந்திக்கும்போது அந்த நெருக்கடியிலும் மிக அதிக அளவில் சக்தி வாய்ந்த ஒரு கொடுங்கோல் ஆட்சியாளரை அழிப்பதன் மூலமாகவே கல்கி அவதாரம் இந்த உலகில் தோன்றும்.
எவ்வளவு ஆண்டு
கல்கி பூமியில் அவதரிக்க இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன. அதாவது கலியுகம் என்பது ஒட்டுமொத்தமாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அதில் 5000 வருடத்துக்கு முன்பாக தான் கலியுகம் ஆரம்பித்திருக்கிறது எனவும் அதனால் இந்த பூமியில் கல்கி அவதரித்து அழிப்பதற்கு இன்று சில லட்ச வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது.ஆறுகள்
பூமியில் கல்கி அவதாரம் நெருங்கும்போது, ஆறுகளில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் புண்ணிய நதிகனாகக் கருதப்படுகிற கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளில் மாற்றங்கள் உண்டாகும்.
அவை மூன்றும் மீண்டும் சொர்க்கத்தில் சென்று சேர்ந்துவிடும். அதாவது, இந்த மூன்று ஆறுகளும் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் முழுவதுமாக வறண்டு போய்விடும். அந்த பகுதி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக, கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் போயிவிடும் என்கிறார்கள்.முன்குறிப்பு
கல்கி அவதாரம் பூமியில் தோன்றுவார் என்று சொ்லவது வெறும் கற்பனையா இல்லை ஏதாவது முன்குறிப்புகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த போது, ஒரு உண்மை தெரிய வந்தது. கல்கி அவதாரம் எடுக்கப்போவது பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் இருக்கிறது. மார்க்கண்டேய ரிஷி முனிவர் பாண்டவர்களின் மூத்த புதல்வனான தர்மனிடம் உரையாடிக் கொண்டிருக்கிற போது, ஒரு அந்தண தம்பதியினரின் வயிற்றில் கல்கி அவதரிப்பார் என்றும், மேலும் அவர் போர்குணம்,விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குவார் என்றும் கூறுகிறார்.
அதோடு அதீத புத்திக்கூர்மையும் உடல் வலிமையும் பெற்ற ஆஜானுபாகுவான இளைஞனாக வருவார் என்றும் குறிப்பிடுகிறார்.
கல்கி அவதரித்த பின் எங்கு தங்குவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது கல்கி இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் தான் தங்குவாராம். அங்குள்ள தீமைகளை அழிப்பாராம். அதாவது பூமியில் நடக்கும் அக்கிரமங்களை அழித்து பூமியை புனிதப்படுத்துவதற்காகவே அவர் இப்படி செய்வார் என்றும், அதன்பின் புதிய பூமி தோற்றம் பெறும் என்றும் கூறப்படுகிறது.கல்கி அவதரித்துவிட்ட அறிகுறி
பூமியில் நடக்கும் சில அன்றாடப் பழக்கங்களின் மாறுபாட்டை வைத்தே கல்கி அவதரித்து விட்டதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்றுதானே கேட்கிறீர்கள்?…
இதோ பட்டியல்… உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அசைவ உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் தங்களுடைய கணவன்மார்களை மரியாதை இல்லாமலும் தகாத வார்த்தைகளாலும் பேசுவார்கள். மற்ற பெண்களுடன் கணவனை இணைத்துப் பேசுவார்கள். கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மக்களில் பெரும்பான்மையானோர் நாத்திகவாதிகளாக மாறிப்போவார்கள்.பூமி அளவுக்கு அதிகமாக வெப்பமாகிக் கொண்டே போகும். நட்சத்திரங்கள் மின்னுவது குறைய ஆரம்பித்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக இருளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கும். இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால், பூமியில் கல்கி அவதரித்துவிட்டார் என்று அர்த்தம்.
எதிர்பார்ப்பு
இந்த கல்கி அவதாரம் எப்படியிருக்கும்?… எப்படி தீமைகளை அழிக்கும் என்பதில் மக்களுக்கு எப்போது பேரார்வம் உண்டாகும். அந்த கல்கி அவதாரம் தான் கலியுகத்தின் இறுதி என்றும் சத்ய யுகத்தின் தொடக்கம் எனவும் கருதப்படுகிறது. கல்கி அவதாரம் எப்போது, எப்படி வரும் என்று கொஞ்சமல்ல, நிறையவே காத்திருந்து தான் பார்க்க முடியும்.