மனிதர்களுடைய நண்பன் எனச் சிறப்பித்துக் கூறப்படும் நாய்களுக்கான நீச்சல் விளையாட்டுப் போட்டியொன்று கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.மூன்றாவது வருடமாக முன்னனெடுக்கப்பட்டுள்ள நாய்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வட பகுதியிலுள்ள பசிபிகா கடலில் நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டி நிகழ்ச்சியில் பல இனங்களையுடைய, பல அளவையுடைய நாய்கள் கலந்து கொண்டுள்ளன. அந்நாய்களுடன் அதற்குரிய உரிமையாளர்களும் குதூகலமாக கலந்து கொண்டிருந்தார்கள்.
இப்போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்வை எந்தவித வருமானங்களையும் எதிர்பார்க்காது பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே ஒரே நோக்காகக் கொண்டு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.